அறிமுகம்
அறிமுகம்
2007 ம் ஆண்டில் துவங்கப்பட்ட' நிகழி மையம்' சமகால அறிவார்த்த மனங்களின் கூட்டு மனசாட்சியாக, ஒரு ஸ்தாபன அமைப்பாக பரிணமிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வடிவம் எடுத்திருந்தது. செயல் ரீதியான அறங்காப்பு முன்னெடுப்புகளை தன் நிறுவன இலக்காக அது கொண்டிருந்தது.
தமிழ்ச்சமூகத்திற்கான ஐவகை குடிமைப் பிரதிநிதிய அமைப்புகளை நிகழி மையம் உருவாக்கி தமிழ் மண்ணில் நிலை நிறுத்துகிறது. இந்த ஐந்து அமைப்புகளும் இதுவரை தமிழ் மண்ணில் இல்லாத ஆனால் இருந்திருக்க வேண்டிய தார்மீக அறங்காப்பு அமைப்புகளாகும். இவை அரசு சார்பற்ற, கட்சி சார்பற்ற நடுநிலை குடிமைச்சமூகத்தின் பிரத்யேக பிரதிநிதிய அமைப்புகளாகும்.